ஞாயிறு, 24 ஜனவரி, 2016

விழுப்புரத்தில் 3 கல்லூரி மாணவிகள் தற்கொலை.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள இயற்கை மருத்துவ கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் இக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், ரூ.2 லட்சம் வரை பணம் கட்டி படித்த பல மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இக்கல்லூரியில் படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா எனற மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பணம் கட்டி ஏமாந்ததால், மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
காலம் பதில் சொல்லும்...