மதுரைக்கு புதிதாக பதவி ஏற்றுள்ள கலெக்டர் திரு. வீர ராகவ ராவ் Collector Madurai நெகிழி(பிளாஸ்டிக்) பைகளை முக்கிய பிரச்சனையாக எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல் கட்டமாக உழவர் சந்தைகளில் நெகிழிக்கு மாற்றாக துணி பைகள் கொடுப்பதை ஊக்குவித்துள்ளார். சுமார் ஐநூறு துணி பைகளை இலவசாமாக கொடுத்து நேற்று B.B. குளம் உழவர் சந்தையில் துவக்கி உள்ளார். பழங்காநத்தம் மற்றும் அன்னா நகர் சந்தைகளுக்கு 250 பைகள் வழங்கப்பட்டு உள்ளது. முதல் மாதத்தில் முப்பது ஆயிரம் பைகளை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதன் தாக்கத்தை அறிய இன்று B.B. குளம் உழவர் சந்தைக்கு சென்று வந்தோம். நாம் கண்டு அறிந்தவை.
1. கடை வைத்திருப்பவர்கள் எவரிடமும் நெகிழி பைகள் இல்லை. சிலர் துணி என்று நினைத்து ஐந்து ரூபாய்க்கு துணி போல் காட்சி அளிக்கும் நெகிழி பைகளை (Non-Woven Polypropylene Bags) வாங்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு இதுவும் மக்காத பிளாஸ்டிக் தான் என்று எடுத்துரைத்தோம்.
2. உரித்த பீன்ஸ் போன்ற மிக சிறிய காய்கறிகளுக்கு பிளாஸ்டிக் பை கட்டாயம் தேவை என்கின்றனர். உண்மையில் அவர்களுக்கு பேப்பர் பொட்டலம் போட்டாலே போதும் என்று எடுத்துரைத்தோம். மருந்து கடைகளில் கொடுப்பது போல பேப்பர் கவர்களையும் பயன்படுத்த அறிவித்துள்ளோம்.
3. நேற்று கொடுக்கப்பட்ட 500 துணி பைகளில் ஒரு சில பைகளை மட்டும் கடைகாரர்களிடம் பார்க்க முடிந்தது. வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க இன்று பை ஒன்றும் மிச்சம் இல்லை. இலவசம் என்றால் தினம் ஆயிரம் பை கொடுத்தாலும் பத்தாது என்று நினைக்கின்றோம். அது தவரான எதிர்பார்ப்பையும் உண்டாக்கிவிடும்.
4. பைகளில் தமிழக அரசின் முத்திரை (logo) இருந்தது மகிழ்ச்சி. தமிழக அரசு அதை காட்சிபடுத்தி வெகு நாட்கள் ஆகிவிட்டது.
இந்த முயற்சியை Theyellowbag மனதார பாராட்டுகின்றது. இது இலவச திட்டம் எனும் வட்டத்துக்குள் நின்றுவிடாது, நெகிழிக்கு எதிரான திட்டமாக உருவாக வேண்டும். எங்கள் ஆதரவும், உழைப்பும், பங்களிப்பும் கொடுக்க தயாராக உள்ளோம்.