செவ்வாய், 26 ஜனவரி, 2016

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு போர்க் குற்றவாளி :கடிதம் போலியானது

நேத்தாஜி ஒரு போர் குற்றவாளி – உண்மை என்ன ?

நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிடும் நேருவின் கடிதம் போலியானது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் வெளியிட்டார். இந்த ஆவணம் ஒன்றில் 1945-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் பதவி வகித்த கிளமெண்ட் அட்லிக்கு காங்கிரஸ் சார்பில் மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது
6eb557a9-0f65-4da2-bcb1-21af7a04b839_S_secvpf
அதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு போர்க் குற்றவாளி போன்றவர் என்று நேரு குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் போலியானது என்று கூறியுள்ள ஆம் ஆத்மியின் தலைவர்களான அஷூதோஷ் மற்றும் சஞ்சய் சிங் “ஒரு சில தலைவர்களை உயர்வானவர்களாகவும், மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்ட சதி மேற்கொள்ளப்படுகிறது. 

முதலில் சர்தார் வல்லபாய் படேலை நாட்டின் மிகப் பெரிய தலைவராக காட்ட முயற்சி மேற்கொண்டார்கள். சுதந்திர போராட்டங்களில் ஈடுபடாதவர்கள், நாட்டுக்காக தியாகம் செய்யாதவர்கள், தற்போது காந்திஜி, நேரு போன்ற தலைவர்களின் புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள்.” என்று கூறியுள்ளனர்.