சனி, 30 ஜனவரி, 2016

மத கலவர பூமியாக மாற்ற நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை தடுத்து நிறுத்து


இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அறிவிப்பு.
மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.மதுக்கூர் மைதீன் அவர்கள் வெளியிடும் அறிக்கை.
தமிழக அரசே....
காவல்துறையே....
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை,மத கலவர பூமியாக மாற்ற நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை தடுத்து நிறுத்து.
ஜனவரி 31 ல் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார்கள்,அதை தடுக்கும் விதமாகவும்,அதை எதிர்க்கும் விதமாகவும்,தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் அகில பாரத ஹிந்து மகா சபா என்ற அமைப்பு ஷிர்க் ஒழிப்பு மாநாடு திடலில்,இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும்,அமைதி பூங்காவாக இருக்கும் திருச்சியை மத கலவரமாக மாற்றி,இரத்த பூமியாக மாற்ற,திட்டமிட்டே காவி கொடி கம்பத்தை நட இருக்கிறார்கள்.
இக் கொடி கம்பத்தை அடுத்த நாள் நடுவதாலோ,இந்து மக்களை அழைத்து விருந்து படைப்பதாலோ எங்களுக்கு எந்த கவலையும்,எதிர்ப்பும் அல்ல.
மாறாக ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கும் போது மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் காவி கொடியை நட்டு,வீண் சச்சரவுகளை ஏற்படுத்த நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை வண்மையாக கண்டிக்கிறோம்.
நாளை இஸ்லாமிய மாநாடு திடலில் காவி கொடி கம்பம் நடப்பட்டால், தமிழக்கத்தில் உள்ள அனைத்து ஹிந்து மகா சபா கொடி கம்பங்களும் தகர்த்து எறியப்படும்.