ஞாயிறு, 31 ஜனவரி, 2016

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் உண்மை நிலை என்ன?




சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியின் கார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மாலை பத்திரிக்கைகளும் கள்ள நோட்டு கடத்தி வரப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
வெறும் வாயிக்கு சோழ பொறி கிடைத்தாற்போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளுக்கு இந்த செய்தி லட்டு மாதிரி கிடைத்ததாக நினைத்து முகநூல் முழுவதும் பரப்பி புழங்காகிதம் அடைந்தனர்.
இவையனைத்தும்(29-1-2016)நடந்தது,
கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் இந்த செய்தியின் உண்மைநிலை அறியாமல் பரப்பியவர்கள் பொய்யர்கள் என்பதை கூறிக்கொண்டு அந்த செய்தியின் உண்மை தகவலுக்கு வருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர்.ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்துள்ளார் TNTJ மாவட்ட நிர்வாகி,
இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும்TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை,
ஒரு சம்பவத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S.அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்களே நினைவிருக்கிறதா?
அதேப்போன்றுதான் இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.
அயோக்கியர்களின்அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தவிடு பொடியாக்கி அயோக்கியர்களின்
முகத்தில் கரியை பூசிவிட்டான், தலைகுனிய வைத்து விட்டான்.
யா ரப்பே நீயே நீதியாளன் !!
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்!!!