திங்கள், 25 ஜனவரி, 2016

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற


பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் -
விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை
சம்பவம் !
மற்றவரகளுக்கு நிச்சயம்
பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை,
மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய
சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல்
இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே
மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று
மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று
சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில்,
குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு
சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம்
நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய
வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள்
செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக
கூறப்பட்டுள்ளது.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை
கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி,
மிக்சி அல்லது அம்மியில் அரைத்து
கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு
மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச்
சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை
கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20
– 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய
நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை
கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க
சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும்
இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு
கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை
சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின்
அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும்
நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர்
ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம்
செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது
சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல்
காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால்
இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின்
நரம்பு முடிவுகள் உள்ளன. அதன்
செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின்
அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி
அணிவிக்கப்படுகிறது. அதை போலவே
பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக
நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன.
ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து
முழுமனதுடன் நான்காம் விரலை தினமும்
சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார்
(மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு
அடைய செய்யும்.
உணவு முறை
============
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு,
உணவுக் கட்டுபாடு மிகவும்
அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம்
சோடியம் அளவை குறைக்கலாம். எனவே
உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும்.
உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு
அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள
ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து
கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில்
டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க
வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக
அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ்
அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர்
வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள
பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம்
குறைக்களாம். மேலும், காய்களை
துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4
மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன்
மூலமும் பொட்டாசியம் அளவை
குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல்
மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
அருமை நண்பர்களே !...
இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு
ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால்
சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல்
கஷ்டப்படுகிறார்கள் .