திங்கள், 25 ஜனவரி, 2016

முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது – அதிமுக திட்டவட்டம்


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நூற்றாண்டையொட்டி தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலைச் செய்ய கோரி தமுமுக , எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் ஆர்ப்பாட்டக்களத்தை அறிவித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புடனும் பொருட்செலவுடனும் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்திற்கு நீதி கிடைக்குமா ?
கிடைக்கவே கிடைக்காது என்று பதிலை படிக்கும் போது சற்று நிதானமாக அதற்கான சான்றுகளையும் கவனியுங்கள்.
1.அதிமுக கைவிரிக்கும்
சிறைவாசிகள் விடுதலை தமுமுகவுக்கு புதுசல்ல.இதே போராட்டத்தை கடந்த 2005 ல் அதிமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் போராடியது – விளைவு ஏமாற்றம்.
2.திமுகவும் கைவிரிக்கும்
அதிமுக இப்படியென்றால் திமுகாவாவது சிறைவாசிகளை விடுவித்ததா என்றால் 2006ல் ஆட்சியைப் பிடித்த திமுகவும் அதை செய்யவில்லை. – விளைவு ஏமாற்றம்.Download (1)
எதிர்காலத்தில் எப்படி ?
சிறைவாசிகளை விடுவித்தால் பாஜக தரப்பு இதை பெரிய பிரச்சனையாக்கும் என்பதால் அதிமுக வாய்மூடும்.
திமுகவைப் பொருத்தவரை சிறைவாசிகளை விடுவிப்பதாக இருந்தால் ஆட்சிக்கு வரவேண்டும் .ஆட்சிக்கு வந்தாலும் சாந்தன் , முருகன் உள்ளிட்டவர்களை விடுவித்தால் மட்டுமே முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க இயலும்.ஆனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாவதால் சாந்தனும் வெளியேறப்போவதில்லை. முஸ்லிம் சிறைவாசிகளும் வெளியேறப்போவதில்லை.
அப்ப சிறைவாசிகளின் விடுதலை என்னதான் வழி ?
ஒரே வழி இருக்கு அதை நாளை சொல்கிறோம்.யோசித்து செயல்படுங்கள்.