சனி, 30 ஜனவரி, 2016

திருடர்கள் எச்சரிக்கை...

திருடர்கள் எச்சரிக்கை... 1
""""""""""""""""""""""""""""""""""""""""
ரோஹித் வெமுலா விவகாரம் பா.ஜ.க விற்கு மிகப் பெரிய நெருக்கடியைத் தந்துள்ளது. மிகக் கேவலமாக அம்பலப்பட்டுப் போயுள்ள இவர்கள் எக்காரணம் கொண்டும் காரணமான அமைச்சர்களைப் பதவி விலகச் செய்ய மாட்டார்கள் என்பதை அறிவோம். மாறாக என்ன குயுக்தி செய்து, ஃப்ராட் செய்து, மூஞ்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றுதான் பார்ப்பார்கள்.
இரண்டு நாள் முன்னர் அவர்களின் மாணவர் அமைப்பான ABVP ஐ உசிப்பிவிட்டார்கள்.ஆதன் இந்திய அளவிலான தலைவர் வினய் பித்ரே என்பவர் ஒரு ப்ரெஸ் மீட் நடத்தி இது சாதிப் பிரச்சினையே இல்லை எனவும் ரோஹித்தின் மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் எனவும், அம்பேத்கர் மாணவர் இயக்கம் அம்பேத்கருக்குத் துரோகம் செய்கிறார்கள் எனவும், இரு மானவர் அமைப்புகளுக்கு இடையிலான போராட்டத்தைத் தீவிர இடதுசாரிகள் சாதிப் பிரச்சினை ஆக்குகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முதல்நாள் அவர்கள் இன்னொரு வேலையையும் ச்ய்தனர். ரோஹித்தின் தாயய்யும் ரோஹித் உட்பட மூன்று பிள்ளைகளையும் கைவிட்டவருமான மணிக்குமாரைத் தேடிப் பிடித்து அவரை ஒரு ப்ரெஸ் மீட் நடத்த வைத்துள்ளனர். அதில் அவர் இதையே சொல்லியுள்ளார். அதாவது இது ஒரு சாதிப் பிரச்சினையே இல்லை, அரசியல்வாதிகள்தான் இதிப் பிரச்சினையாக்குகிறார்கள் எனவும் சொல்லியுள்ளார். தாங்கள் 'வடேரா' எனும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் எனவும் தலித்கள் இல்லை எனவும் கூறியுள்ளார். ரோஹித்தின் தாய்வழிப் பாட்டி தலித் என்பதால் அதை வைத்து ரோஹித்தை தலித் எனச் சொல்வது தவறு எனவும் கூறியுள்ளார்.
பா.ஜக வினர் எந்த லெவலுக்கும் போவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ரோஹித்தின் தாய்வழிப்பாட்டி தலித் என்றால் ரோஹித்தின் அம்மாவும் தலித்தானே என்கிற கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் கேட்டனரா என்பது தெரியவில்லை.
பெற்றோர்களில் ஒருவர் தலித் அல்லாதவராக இருக்கும் பட்சத்தில் குழந்தையை தலித் என்பதா இல்லை தலித் அல்லாதவர் என்பதா என்கிற கேள்விக்கு உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழ்ங்கி்யுள்ளது.
அந்தக் குழந்தை யாரால் வளர்க்கப்படுகிறார்கள், எத்தகைய சூழலில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துத்தான் குழந்தையின் சாதியைத் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறி. அதாவது அந்தக் குழந்தை தீண்டாமையை அனுபவிக்கும் சூழலில் வளர்ந்தால் அது பட்டியல் சாதியினராகவே கருதப்படும்.
ரோஹித் விஷயத்தில், அவர் அவரது தாயால் வளர்க்கப்பட்டுள்ளார். தீண்டாமையை அனுபவிக்கும் சூழலிலேயே வளர்க்கப்பட்டுள்ளார். ஆய்வாளராகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின்னும் அவர் தீண்டாமைக்கு ஆட்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவினர் செய்யும் ஃப்ராட் வேலையைப் பாருங்கள். இதற்குப் பாவம் ரோஹித்தின் தந்தையையும் பயன்படுத்துகின்றனர்.
திருடர்கள் எச்சரிக்கை...

Related Posts: