வியாழன், 28 ஜனவரி, 2016

தரங்கம்பாடி முஸ்லிம் வாலிபர் சாதனை

இந்திய முஸ்லிம் மீடியா's photo.
சமீப காலங்களில்,தமிழகத்தின் இளம் தலைமுறைகள் நம்பிக்கை நாயகர்களாய் மாறி வருகிறார்கள்.
நாகப்பட்டினம் இ, ஜி,எஸ் பொறியியல் மாணவரான சேக் அமீனுத்தீன் ,என்ற "இளம் விஞ்ஞானி" யின் புதிய முயற்சி.
சாலையில் ஓடும் இரு சக்கர மோட்டார் சைக்கிளை இயங்கச் செய்து, அதன் மூலம் கிணற்றில் இருந்து நீரை இறைப்பது.
ஒரு செயின் பிராகட்டுடன், இன்னொரு செயின் பிராகட்டை இணைத்தால் மோட்டார் ரெடி.
எளிதில் எடுத்து செல்லும் வகையில் பத்து கிலோ எடை மட்டும் உள்ளது.
ஒரு மணி நேரத்தில் 2,200 லிட்டர் நீரை இரைத்து விடும். குறைந்த சுழற்சியில் அதிகப்படியான நீரை இரைத்து விடும் . எரிபொருள் சிக்கனம் உடைய இந்த மோட்டார் ஒரு லிட்டருக்கு மூன்று மணி நேரம் ஓடக்கூடியது.
இவரைப் போன்ற இன்னும் எத்தனையோ பேர் மனிதகுலத்திற்கு தேவையான பல நல்ல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது நம் கடமை.
வாழ்த்துக்கள் ஷேக் அமீனுதீன்!