சீமான் அறைகூவலை ஏற்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .விவாத மேடை கண்டு, திருக்குறளை உலகப்பொதுமறை என நரூபிப்பாரா! அல்லது நிரூபிக்க திராணியற்று மேடையில் சொன்னதுபோல் திருக்குறளையும் தன்னையும் எரித்து மாய்த்துக்கொள்வாரா #சீமான்.மரியாதைக்குரிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எழுதும் விவாத ஏற்புக் கடிதம்திருக்குறள் தான் உலகப் பொதுமறை என்றும் இது குறித்து யாருடனும் விவாதம் செய்யத் தயார் என்றும் நீங்கள் பேசிய வீடியோ அறைகூவலைக் கேட்டோம். எந்த மதத்துக்காரனும் விவாதிக்க வரலாம். பொது மேடையில் விவாதிக்க வரலாம் என்ற தங்களின் அறைகூவலை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்கிறது. திருக்குறளில் நல்ல கருத்துக்கள் இருப்பது போல் காலத்துக்கு ஒவ்வாத, அறிவுக்குப் பொருந்தாத, நடைமுறைப்படுத்த முடியாத சீமானே எதிர்க்கின்ற பல கருத்துக்கள் உள்ளன என்பதை தக்க ஆதாரங்களுடன் நாங்கள் உங்களுடன் விவாதம் செய்து நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.விவாதம் நடப்பதற்கு முன்னர் அது குறித்து விவாத ஒப்பந்தம் செய்ய வேண்டும். எப்படி விவாதத்தை அமைத்துக் கொள்வது? எத்தனை நாட்கள் நடத்துவது. ஒவ்வொரு தரப்பிலும் எத்தனை பேர்? எந்த நாட்களில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசி ஒப்பந்தம் போட்டு விவாதம் நடத்துவோம். உங்கள் அழைப்பை நாங்கள் ஏற்கிறோம்.விவாத ஒப்பந்தம் செய்யும் நாளைக் குறிப்பிட்டால் அந்த தேதியில் விவாத ஒப்பந்தம் செய்வோம். உங்கள் அலுவலகமாக இருந்தாலும் பரவாயில்லை. தாங்கள் விரும்பினால் எங்கள் அலுவலகத்திலும் வைத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் செய்ய எங்கள் தரப்பில் ஐவர் இடம் பெறுவோம். தங்கள் தரப்பிலும் அதே எண்ணிக்கையில் இடம் பெறலாம், இந்த எண்ணிக்கையைக் கூடுதலாக அல்லது குறைவாக ஆக்க நீங்கள் விரும்பினால் இரு தரப்புக்கும் சம எண்ணிக்கை என்ற அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும் தயார்.உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். இப்படிக்கு
Posted by Maz'har Ahmed on Monday, January 25, 2016
❗