செவ்வாய், 26 ஜனவரி, 2016

திருமணப் பதிவுச் சட்டத்தில் விதிவிலக்கு வேண்டும் Jawahirullah MH


டி.இ.டி. தேர்வு நடத்த்ப்பட வேண்டும்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் நான் ஆற்றிய உரையிலிருந்து
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழ்நாட்டில் டி.இ.டி. தேர்வு இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தேர்வை உடனே நடத்துவதற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்வதோடு கூட்டுறவு வீட்டுவசதிக் கடனின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்து அசல் தொகையை அவர்கள் செலுத்துவதற்கு உரிய கால அவகாசம் தர வேண்டும் என்றும் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
நீண்ட காலமாக தமிழக முஸ்லிம்களின் ஒரு கோரிக்கை இருக்கிறது. தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டத்திலே உரிய விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இதுகுறித்து பலமுறை பேசியிருக்கின்றேன். அதை இந்த அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.