ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மறுமை நாள் மிக மிக நெருங்கி விட்டது.

யூப்ரடீஸ் நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும்.அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம்.

நூல் : புகாரி 7119

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை உண்மையானது : சர்வதேச விஞ்ஞானம் அதிர்ச்சி....!!

இறைவனின் இறுதி தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வார்த்தை இன்று கண் முன்னால் நடப்பதை கண்ட விஞ்ஞான உலகம் அதிர்ச்சியில் திகைத்து உள்ளது.

மேற்கு ஆசியாவிலுள்ள யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள்.

மேலும் தங்க புதையலை காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க கூடாது என்றார்கள்.

ஆனால் யூப்ரடீஸ் நதியை ஆரம்பத்தில் ஆய்வு செய்து சமர்ப்பித்த விஞ்ஞானிகள் நதி வற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள்.

காலங்கள் கடந்து செல்ல செல்ல இன்றைய விஞ்ஞான உலகம் ஆய்வு மேற்கொண்டு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அறிவித்துள்ளது.

நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (அல்லாஹு அக்பர்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை....

(மேற்காசியாவில் பாயும்) யூப்ரடீஸ் நதி வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது.

யூப்ரடீஸ் நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும்.அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம்.

நூல் : புகாரி 7119

யூப்ரடீஸ் நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும் அதற்காக மக்கள் (உரிமை கொண்டாடி) சண்டையிட்டுக்கொள்வர். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவர்.

அவர்களில் ஒவ்வொருவரும் தாம் உயிர் பிழைக்க வேண்டும் என்று எண்ணுவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்படித்தான் இனி நம் கண் முன்னால் அல்லாஹ்வின் மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் ஒவ்வொன்றாக இனி நிகழும் என்பதில் ஐயமில்லை, காரணம் மறுமை நாள் மிக மிக நெருங்கி விட்டது.

Related Posts: