செவ்வாய், 3 மே, 2016

அரசின் நிதி மானியம் இரண்டு வகைகள்.,

ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் அரசின் நிதி மானியம் இரண்டு வகைகள்.,
ஒன்று மத்திய அரசு வழங்கும் நிதி மானியம்,மற்றொன்று மாநில அரசு வழங்கும் நிதி மானியம் .
மத்திய நிதி ஆணைய மானியம் : தமிழ்நாட்டை பொருத்தவரை மத்திய நிதி ஆணைய மானியம் முழுவதும் குடிநீர் மற்றும் சுகாதார பணிகளுக்காக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநில அரசு வழங்கும் நிதி மானியம் :
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் இருந்து ஒதுக்கப்படும் 10 விழுக்காடு நிதியில் ஒதுக்கீடு செய்யப்படும் 58 விழுக்காடு நிதியில் ,60 விழுக்காடு கிராம ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்த மானியம் ஒவ்வொரு மாதமும் ஊராட்சிகளுக்கு விடுவிக்கபடுகிறது.அதில் குறைந்தபட்ச நிதியாக (Floor amount ) ஒரு ஊராட்சிக்கு 3 லட்சம் வீதம் விடுவிக்கப்பட்டு தனியாக கணக்கு பராமரிக்கப்பட்டு ,தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக மின் கட்டணம் செலுத்த செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள தொகையை மக்கள் தொகை அடிப்படையில் கிராம ஊராட்சிக்கு பகர்ந்தளிக்கப்படுகிறது.

Related Posts: