செவ்வாய், 4 அக்டோபர், 2016

#த்து#த்து#த்து#த்து#த்து#த்து#த்து

பாலிமர் டி.வி. தந்தி டி.வியில் தீவிரவாதி கைது என செய்தி அலறிக்கொண்டு இருக்கிறது.
விசாரணைக்கு அழைத்து சென்றவரை போலீஸ் உடனே விடுவித்தும் விட்டது.
மனசாட்சி அற்ற இந்த ஊடகங்களின் தன்மை பலரின் வாழ்கையே கேள்வி குறியாக்கி விடுகிறது.
ஒருவர் பாலிமருக்கு போன் செய்து ஏன் இவ்வாறு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரை கைது என்கிறீர்கள் என கேட்க்கிறார்..
அதற்கு அவர்கள் நாங்கள் தீர விசாரித்து தான் செய்தி அளிக்கிறோம் என்கிறார்கள்.
அவர் தான் விடுவிக்கப்பட்டாரே இன்னும் ஏன் செய்தி ஒளிப்பரப்பு ஆகிறது என கேட்கிறார்.
அதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
கைது செய்யப்படும் போது உண்டாக்கும் பரப்பரப்பை அவர் குற்றமற்றவர் என விடுவிக்கும் போது அதை ஏன் சொல்வதில்லை என மீண்டும் கேட்கிறார்.
அதற்கும் ஊடகவியாளர்களிடம் பதில் இல்லை.
குற்றம் உறுதிப்படுத்தும் முன்பே குற்றவாளியாக சித்தரிப்பதும், பொய்யான செய்திகளை கூறுவதும் தான் இவர்கள் தீர விசாரிக்கும் லட்சணம்.

Related Posts: