வெள்ளி, 7 அக்டோபர், 2016

கொழுப்பை கரைக்கும் வெங்காயம்!


உணவுகளில் வெங் காயத்துக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் வெங்காய சட்னி, வெங்காய சாம்பார், வெங்காய பச்சடி, வெங்காய வடகம் என வெங்காய உணவுகளின் பட்டி யல் நீள்கிறது. வெங்காயத்தில் வைட்டமின் `சி’ சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் `சி’ சத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்பதன் மூலம் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
வெங்காயம் ஒரு நச்சுக் கிருமி கொல்லியாக பயன்படுகிறது. உதாரணமாக, அம்மை மற்றும் காலரா பரவும் காலங்களில் வீடுகளைச் சுற்றிலும் சின்ன வெங்காயத்தை வெட்டி வைத்தால் அந்த நச்சுக்கிருமிகளை உள்ளிழுத்து, நோய்களிடமிருந்து நம்மை காக்கும் வல்லமை படைத்தது. மேலும் உடலை மெலிதாக்கவும், குரலை இனிமையாக்கவும், பித்தத்தை தணிக்கவும், மூளை சுறுசுறுப்படையவும் செய்கிறது வெங்காயம். இதுதவிர கொழுப்புச்சத்தை கரைத்து வயிற்றுக்கட்டிகளை நீக்கக்கூடியது.
வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி அதில் மோர் விட்டு உப்பு, மிளகு, சீரகம் போட்டு தாளித்து பகல் உணவோடு சாப்பிட்டு வந்தால் அதன் சுவை மட்டுமல்ல… சுகமே தனி. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரலில் கபம் மற்றும் இதயக்கோளாறுகள் வர வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் அன்றாடம் வெங்காய பச்சடியை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..

Related Posts:

  • புறா வளர்ப்பு புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில்,ஓர் அறையை கட்டவேண்டும்.செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப… Read More
  • அசம்பாவிதம் நேற்று திண்டுக்கல்லில் ஒரு அசம்பாவிதம் இதனாள் ஓர் உயிர் பிறிக்கப்பட்டது! அதனால் இன்று தான் முறைப்படி மனுகுடுக்கப்பட்டது! மனுவை பார்வையிட்ட அதி… Read More
  • Keeladi , Sivagangai district,Vaigai civilization 3 rd BCE excavations by professor Venkatachalam, archaeologist … Read More
  • Hadis - பொறுப்பாளர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் ப… Read More
  • மதவெறி கூட்டத்திற்க்கு இந்த வீடியோவை பார்வைக்கு தருகிறோம் முஸ்லிம் விரோத போக்கை கடைபிடிக்கும் ‪#‎புளூகிராஸ்‬ என்னும் பார்பண சிந்தனை கொண்ட மதவெறி கூட்டத்திற்க்கு இந்… Read More