ஹைதராபாத்தில் ஆராதனா என்ற பதிமூன்று வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இது ஒன்று கோபத்தினாலோ அல்லது சமூகத்திற்க்காக நடத்தப்பட்ட உண்ணவிரத போராட்டம் அல்ல.
ஜைனர்களின் மத வழக்கப்படி நடந்த உண்ணாவிரதமாம். ஆராதனாவை சொகந்திரா பாத் பாட்பஜார் பகுதி மக்கள் உண்ணவிரதத்திற்க்கு முன்பே குழந்தை துறவியாக போற்றி வந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே அவரை உண்ணாவிரததிற்க்கு தூண்டி உள்ளனர்.
ஆராதனாவின் பெற்றோர் ஒன்றும் வசதி அற்றவர்கள் அல்ல, அப்பகுதியில் பிரபல நகை கடை உரிமயாளர் அவர். அவரே தன் மகளை 68 நாட்களுக்கு முன் மணப்பெண் போல் அலங்கரித்து உண்ணாவிரத மேடைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஜெயின் சமூக மததலைவர்கள் மூக்கை கட்டிக்கொண்டு கிருமிகள் மூக்கின் வழியே உள்ளே நுழைந்து இறந்துவிடக்கூடாது என்றும், தாங்கள் நடக்கும் பாதையை துடைப்பம் வைத்து கூட்டி நடப்பதற்க்கு, எறும்பு போன்ற உயிரினங்கள் எங்கள் காலடி பட்டு நசுங்கி இற்ந்துவிடக்கூடாது என்றும் வியாக்கியானம் சொல்வார்கள். மேலும் உணவில் கடுமையான முறையில் சைவத்தினை கடைப்பிடிப்பார்கள்.
இத்தனை அக்கறை மிருகம், சிறிய உயிரினங்கள், ஏன் கிருமிகள் மீதுவரை காட்டும் இவர்கள் அதே மத சம்பிரதாயம் என்று ஒரு மனித உயிரை கொன்றுள்ளார்களே இதுவா இவர்கள் கூறும் ஜீவகாருண்யம்? இதைத்தான் இவர்கள் மதம் வழிகாட்டுகின்றதா? விலங்குகளைவிட இவர்கள் பார்வையில் மனித உயிர் அற்பமானதா? ஒரு அப்பாவி மைனர் சிறுமியை கொன்றுவிட்டு அவர்களுக்கு புனிதர் பட்டம் சூட்டிவிட்டால் அது மத சடங்கா? அதில் சட்டம் குறுக்கிட முடியாதா? கூடாதா?
இந்த சந்தர்ப்பத்தில், கடந்த ஹஜ் பெருநாளின்போது ஒட்டகத்தை அறுக்ககூடாது என்று சில மிருகங்கள் மிருகத்திற்க்காக கச்சை கட்டி ஆடியது. அந்த மிருகங்கள் இப்பொழுது மத சடங்கு என்று கூறி ஒரு மைனர் சிறுமியை கொன்றுள்ளது ஒரு சமூகம், எங்கே போனது அந்த மிருகங்கள்?
அந்த வழக்கில் அறிவுப்பூர்வமாக ஒட்டகத்தை வெட்ட சரியான இடம் இல்லாததால், அதனை தடை செய்கின்றேன் என்று அற்புதமான அறிவாற்றலுடன் தீர்ப்பளித்த நீதிபதி, இப்பொழுது இந்த சிறுமியை அழிக்க ஏற்படுத்தபட்ட உண்ணாவிரத மேடைதான், அவரை அழிக்க சரியான இடம், அதனால் இது ஆகுமானது என்று சொல்வாரா?
என்னங்கடா உங்கள் சட்டம்? என்னங்கடா உங்கள் அடிப்படை நிலை? ஒரு விலைமதிப்பில்லா மனித அதுவும் மைனர் குழந்தை உயிரை கொல்வதை பக்தியோடு பார்க்கின்றீர்கள்? மத அடிப்படையில் விலங்குகள் அறுக்கப்படுவதை, மதமும், மார்க்கமும், சட்டமும் அனுமதிப்பதை தடுக்கின்றீர்கள்? கேட்டால் உயிரில் மனித உயிர் என்ன, விலங்கு உயிர் என்ன என்று கேட்க்கின்றீர்கள்?
ஆனால் இங்கே மனித உயிரை மயிராக நினைத்து அழித்த்தை பற்றி வாயே திறக்காமல் இருக்கின்றீர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா? அல்லது மனித உருவில் நடமாடும் மிருகங்களா? த்தூ…..