பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், விரைவில் சோதனை அடிப்படையில் சில நகரங்களில் பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகள் வலம்வரும் என தெரிகிறது.
இதுகுறித்து மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் பாராளுமன்றத்தில் அளித்த பதிலில் நாட்டின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் பருத்தி மற்றும் பருத்தி துணியிலான பொருட்களினால் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் பிளாஸ்டிக் மூலப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் நோட்டுகள் பருத்தி நோட்டுகளை விட அதிக நிறைய நாட்கள் நீடிக்கும். கள்ள நோட்டு அடிப்பதும் கடினம் என கூறப்படுகிறது.
பதிவு செய்த நாள் : March 18, 2017 - 01:53 PM