செவ்வாய், 7 மார்ச், 2017

குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியாவுக்கு 2வது இடம்

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டால் இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணிகள் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதே காரணங்களால் அவதிப்படும் இந்தியாவின் அண்டைநாடன மியான்மர் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து, இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு, சுத்திகரிக்கப்படாத குடிநீர், மாசடைந்த நிலத்தடி நீர் போன்றவற்றால் வருடத்திற்கு 5 வயதுக்குட்பட்ட 248.14 குழந்தைகள் இறக்கின்றனர். மேலும், இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழித்தல், மாசடைந்த இடத்தில் வசித்தல் போன்ற காரணங்களால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில், துப்புரவுப் பணிகளை துரிதப்படுத்தி குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Related Posts: