March 11, 2017, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய பாதுகாப்பு துறையில் ஆயுத உபகரணங்கள் வாங்குவதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 2.42 லட்சம் கோடி ரூபாய் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் லோக்சபாவில் தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறையின் முப்படைகளுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயுதங்கள் வாங்க செலவுசெய்யப்பட்ட பணத்தின் விவரங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
* 2013-2014 நிதியாண்டில் 66,821 கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவு செய்யப்பட்டுள்ளது.
* 2014-15 நிதியாண்டில் 65,583 கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவு செய்யப்பட்டுள்ளது.
* 2015-16 நிதியாண்டில் 62,341 கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவு செய்யப்பட்டுள்ளது.
* 2016-17 நிதியாண்டில் 47,494 கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவு செய்யப்பட்டுள்ளது.
இது வெறும் ஆயுதுங்கள் வாங்க செலவு செய்யப்பட்ட பணத்தின் விவரங்களாகும். இதுபோக ராணுவ வீரர்களுக்கான சம்பளம் , ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோருக்கான பென்ஷன் தொகைகள் போன்றவற்றை கணக்கில் கொண்டால் 2015-2016 ஆம் ஆண்டு மட்டும் பாதுகாப்புத்துறைக்கு இந்திய அரசு செலவிட்ட தொகை 3.4 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் 2.3 சதவீதமாகும்.
இதுவே 2017 -2018 ஆம் ஆண்டு பொதுபட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் 3.59 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்புத்துறைக்கு இந்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் அதிகமாகும்.
சீனா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கடந்த ஆண்டுகளில் ராணுவத்திற்கான செலவுகளை படிப்படியாக குறைத்துக்கொண்டு பெரும்பாலான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன்மூலம் பாதுகாப்புத்துறையில் அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது.
இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள சீனா 1.9 சதவீத தொகையை ராணுவத்துக்கு செலவு செய்யும் நிலையில், இந்தியா தன் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 2.3 சதவீதம் ராணுவத்திற்காக செலவு செய்து வருகிறது. உலக அளவில் ராணுவத்திற்காக செலவு செய்யக்கூடிய நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள் முறையே, 1.அமெரிக்கா, 2. சீனா, 3. ரஷ்யா, 4.சவுதி அரேபியா, 5. பிரான்ஸ்.
ராணுவத்திற்கு செலவிடப்படும் தொகையில் (கடந்த ஆண்டு 3.4 லட்சம் கோடி) 40 சதவீதம் ராணுவ வீரர்களுக்கு சம்பளமாகவும், 20 சதவீதம் பென்ஷன் தொகைக்காகவும் செலவிடப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத நிதி முப்படைகளுக்கான ராணுவ உபகரணங்களுக்காக செலவு செய்யப்படுகிறது. இதில் மிகவும் சொர்ப்பமான தொகையே பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்ப ரீதியான ஆராய்ச்சிகளுக்காக செலவிடப்படுகிறது. அதிநவீன போர் விமானங்கள்,போர் கப்பல்கள் என பெரும்பாலான ராணுவ தளவாடங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 60 சதவீதத்திற்கும் மேலான ஆயுதங்கள் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதே இந்த செலவுகளுக்கான பெரும் காரணமாக திகழ்கிறது.