விரைந்து நடவடிக்கை எடு!
புளியங்குடி 21 வது வார்டு ரகுமத் நகர் பகுதியைச் சார்ந்த 8ஆம் வகுப்பு மாணவன், 14 வயது சிறுவன் சைபுல்லா, (தந்தை பெயர்செய்யது இசுமாயில், தாய் பெயர் செயலானி )சுற்றுச் சுவர் இல்லாத தனியாருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தான். புளியங்குடியில் இது இரண்டாவது சம்பவமாகும், இதே பகுதியில் சுமார் 1 வருடத்திற்கு முன்பு சிறுமி ஒருவர் தவறி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் கிணற்றைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமுமுக வலியுறத்துகிறது.