நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்கின்றது என்று வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நுண்ணுயிர்கள் கழிப்பறையில் இருப்பதைவிட மிகவும் கொடுமையானது என்று தெரியவந்துள்ளது. இந்த கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை இந்திய தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நிலைமை கட்டுக்குள் இருக்கின்றது.
இது போன்ற பாதிப்பில் இருந்து தப்பிக்க ஸ்மார்ட் போன்களின் திரைகளை தினந்தோறும் மெல்லிய துணியால் சுத்தம் செய்வது மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.