சனி, 11 மார்ச், 2017

​மணிப்பூர் தேர்தல் முடிவுகள்: மக்களால் புறக்கணிக்கப்பட்ட போராளி இரோம்


மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை கைவிட்டு, அரசியல் கட்சி தொடங்கி, மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், 85 வாக்குகள் மட்டுமே பெற்று, காங்கிரஸ் முதலமைச்சர் ஓக்ரோம் இபோபி சிங்கிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். 6-இல் ஒரு பகுதி வாக்குகளைப் பெறாமல், டெபாசிட்டைத் திரும்ப வாங்கமுடியாத தோல்வியைச் சந்தித்திருக்கிறார் இரோம் ஷர்மிளா. 121 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
​மணிப்பூர் தேர்தல் முடிவுகள்: மக்களால் புறக்கணிக்கப்பட்ட போராளி இரோம்

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக 16 வருடங்களாக உண்ணாவிரதமிருந்த ஷர்மிளா, ஆகஸ்ட் 2016 -இல் தனது உண்ணாவிரதத்தை முடித்து அதற்குப் பிறகு தொடங்கிய Peoples’ Resurgence and Justice Alliance கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவரது கட்சி மக்களிடமிருந்தே பணத்தைச் சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, பணமும், மனித சக்தியும் வலுவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகள் பெரிய தாக்கத்தை என்னிடம் ஏற்படுத்தாது. பணம் பாய்ந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.

இரோம் சனு ஷர்மிளா, வீடு வீடாகச் சென்று, ஊழல், குடும்ப வன்முறை, மனித உரிமை மீறல்களை குறித்தும், பெண்கள் அதிகமிருக்கும் இடங்களுக்குச் சென்றும் பிரச்சாரம் செய்துள்ளார். இவற்றையும் கடந்து, 2007-இல் இருந்து தவ்பால் தொகுதியில் ஏற்கனவே பெருத்த ஆதரவு படைத்த இபோபி சிங் வெற்றிபெற்றுள்ளார்.