திங்கள், 3 ஏப்ரல், 2017

கொலம்பியாவில் நிலச்சரிவு... தொடரும் மீட்பு பணி!

கொலம்பியாவின் புட்டமேயோ மாகாணத்தில்  கடுமையான மழையால் நேற்று பல இடங்களில் ஆறுகளின் கரை உடைந்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தன. ஆங்காங்கே  நிலச்சரிவு ஏற்பட்டு, கட்டடங்கள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.
கொலம்பியா
இதனால், பல இடங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக,கொலம்பியாவின் மகோவா நகரில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 250­க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காணாமல்  போய் இருக்கிறார்கள். இதனால், அந்த நகரின்பல பகுதிகள் உருக்குலைந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கொலம்பியா அதிபர், ஜூயான் மானுவேல் சான்டோஸும் உடனடியாக அந்தப் பகுதிகுச் சென்று  மீட்புப் பணிகளை பார்வையிட்டார். கொலம்பியா விமானப் படை, விமானங்கள் மூலம்   பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை  வழங்கி வருகிறது.