தேசமெங்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுவதை புரிவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் மல்லப்புரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் மாட்டு இறைசிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.
மல்லப்புரம் இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ், 'எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் மக்கள் அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்க செய்வேன். நான் வெற்றிபெற்றால் அனைத்து தரப்பினருக்கு தடையின்றி மாட்டு இறைச்சி கிடைக்க வழிசெய்வேன்’, எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உ.பி, ஜார்கண்ட், சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இறைச்சி கூடங்களுக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சட்டிஸ்கர் முதல்வர் ராமன் சிங், 'பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்' என கூறியிருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் பா.ஜ.கவின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களை கிளம்பியுள்ளன,
இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளரான ஸ்ரீபிரகாஷ் மாட்டு இறைச்சிக்கு ஆதரவாக பேசிவருகிறார். பா.ஜ.கவின் கொள்கைக்கு எதிராக அவர் பேசி வாக்கு சேகரித்து வருவது ஆச்சர்யமளிக்கும் வகையில் உள்ளது.