செவ்வாய், 7 மார்ச், 2017

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடம்

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, அதுபற்றி ஆராய்ச்சி செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இதில் பொது சேவைகளைப் பயன்படுத்திய 10 இந்தியர்களில் 7 பேர் லஞ்ச கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆசியா பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை, சர்வதேச வெளிப்படை நிறுவனம் பெர்லினில் இன்று வெளியிட்டது. இதற்காக கிட்டத்தட்ட 22,000 பேரிடம் ஊழல் குறித்த அனுபவங்கள் கேட்டறியப்பட்டன.
இந்தியாவில், இந்த ஆய்விற்குப் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய அரசாங்கம் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர். இருந்தாலும், இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஊழலுக்கு எதிராக போராடுவதாக 63 சதவீதம் பேர் கருதுகின்றனர். இந்தியாவில் லஞ்சம் கொடுப்பவர்களில் 73 சதவீதம் பேர் எழைகள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா உட்பட 16 ஆசிய பசிபிக் நாடுகளில், சுமார் 90 கோடி மக்கள் (அதாவது 4 பேரில் ஒருவர்), லஞ்சம் கொடுத்து பொது சேவைகளைப் பெறுகின்றனர்.
இந்தியாவிற்கு அடுத்து அதிகப்பட்சமாக வியட்நாமில் 65 சதவீதம் பேர் லஞ்சம் ஆளிப்பதாகக் கூறியுள்ளனர். ஜப்பான் குறைந்த லஞ்ச விகிதம் உள்ள நாடு என தெரிய வந்துள்ளது. அங்கு வெறும் 0.2 சதவீதத்தினர் மட்டுமே லஞ்சம் அளித்ததாகக் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: