நிகழ்ச்சிகளுக்கு வெளியே செல்லும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் உதவி வழங்கிக் கொண்டிருந்த மேலும் ஒரு அமைச்சரை முற்றுகையிட்டு மீனவர்கள் கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க நாகை அக்கரைப் பேட்டைக்கு சென்றிருந்தார் ஓ.எஸ்.மணியன் , அப்பொழுது மீனவர்கள் அவரை முற்றுகையிட்டு
”ஏற்கனவே இது போன்று எங்களது படகுகளை பிடித்து வைத்துக் கொண்டார்கள் என ஏராளமான புகார்கள் கொடுத்தோமே அப்பொழுதெல்லாம் வரவில்லை இப்பொழுது மட்டும் வந்து பணம் கொடுக்கின்றீர்கள் உங்களிடமே கூட நான் ஏற்கனவே புகார் கூறியிருக்கின்றேனே நீங்கள் எதுவுவே செய்யவில்லையே”
என அமைச்சரை பாாத்து நேருக்கு நேராக கேள்விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர்கள் உதவி வழங்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் எனினும் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பி வருவது குறிப்பிடதக்கது.
source: satrumun