வெள்ளி, 30 அக்டோபர், 2020

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி மனு!

 ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி டெல்லியில் இன்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் அன்சு பிரகாசை சன்சார் பவனில் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இதனால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் இவ்விகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்பப்படும் என தெரிவித்தார்.

 

விரைவில் மத்திய சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்த அவர், செயலாளரிடம் மனு அளித்ததை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்க உள்ளதாக செயலாளர் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் கூறினார்.