கோவையில் பதற்றம்! முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல்! போலீசார் குவிப்பு!
நேற்று இரவு (04-03-2017) இந்து முன்னணி சங்பரிவார அமைப்பினர் முஸ்லிம்களின் கார்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீண்டும் கோவையில் ஒரு கலவரப் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருப்பினும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்து முன்னணி இயக்கத்தையும் அதற்கு ஆதரவாக செயல்படும் பா.ஜ.க. வையும் மக்கள் தனிமைப்படுத்திட வேண்டும்.
5.3.17 இன்று காலை இந்த அசம்பாவித சம்பவத்தை கண்டித்து துடியலூர் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃபிரண்ட்ஆஃப் இந்தியா, நீலப்புலிகள், SDPI கட்சி மற்றும் இடதுசாரி கட்சியினரைச் சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்கள்கண்டனங்களை பதிவு செய்தனர்.
பொது அமைதிக்கு எதிராக செயல்படும் இந்து முன்னனி போன்ற இந்துத்துவ அமைப்பினரை பொதுமக்கள் புறக்கணிக்கவேண்டுமென்றும் கோஷங்கள் முன்வைக்கப்பட்டது.
source: kaalaimalar