ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்

 

ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கு 10 பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ள உலக டென்னிஸ் போட்டி செப்டம்பர் 10, 11ம் தேதிகளில் இந்தியா சார்பாக யார் கலந்து கொள்வார்கள் என்பதற்கான தகுதிப்போட்டி நடைபெற உள்ளது. அதில் 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியை 7500 பேர் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை அனைத்து பகுதி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற 26 ,27 ஆம் தேதிகளில் ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற உள்ளது. அதிலும் மஞ்சள் பை திட்டத்தை மீண்டும் கொண்டு செல்லப்படும் என்றும், மக்கள் மனதில் ஏற்படும் மாற்றதால் மட்டுமே நெகிழிப்பையை ஒழிக்க முடியும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

source https://news7tamil.live/discharges-of-dyes-in-rivers-will-be-prevented.html

Related Posts: