சனி, 18 மார்ச், 2017

தூக்கத்தைக் கெடுக்கும் ஃபேஸ்புக், வாட்ஸ் ‌அப்! ஆய்வில் பகீர்

ஃபேஸ்புக், வாட்ஸ் ‌அப் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் பலர் தூங்குவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூரில் உள்ள நரம்பியல் மருத்துவமனையான நிம்ஹான்ஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தூங்குவதற்குத் தாமதமாவதால் காலையில் விழித்தெழுவதற்கும் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சர்வதேச தூக்கத் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. சரியான‌த் தூக்கமின்மையால் இ‌தய கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கம் தொடர்பாக ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகளால் தங்களைத் தேடி ‌வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவு‌ம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Posts: