செவ்வாய், 20 ஏப்ரல், 2021

டிராஃபிக் ராமசாமிக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி

 சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர் சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் இறங்கி போக்குவரத்தை சரிபடுத்துவார். அதனாலேயே இவருக்கு டிராஃபிக் ராமசாமி என்று பெயர் வந்தது. சென்னையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக ஓடிக்கொண்டிருந்த மீன்பாடி வண்டிகளை வழக்கு தொடர்ந்து ஒழித்தார். அரசியல் கட்சியினர் சாலைகளில் அனுமதியின்றி வைக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார். அது மட்டுமில்லாமல், இவர் தொடர்ந்த பல பொது நல வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் பல திருப்புமுனை தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் எடுக்கப்படுகிறது.


தற்போது 86 வயதாகும் டிராஃபிக் ராமசாமி தேர்த பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஏப்ரல் 4ம் தேதி உடல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிசைப் பிரவில் (ஐசியூ) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/traffic-ramasamy-hospitalized-293838/

Related Posts:

  • தொழத தொழத் தொடங்கியவர் #விடலாகாது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!'' என்று… Read More
  • பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா? பைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) கூறுகின்றது. மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குக் காரணம் ஷைத்தான் தான் என்ற … Read More
  • Salah Time Table - Dec 2013 Read More
  • நற்கூல "ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!" -இறைத்தூதர்(ஸல்) அவர்க… Read More
  • ஜோதிடனிடம் யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. -நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் . அறிவிப்பாளர்: ஸஃப… Read More