சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.
அடுத்த நாள் விவேக் மரணமடைந்ததையடுத்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காவல்துறையில் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்தார். அதன்பேரில் வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்வதில் இருந்து விலக்கு பெறுவதற்காக முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றி தான் உள்நோக்கத்துடன் கருத்து கூறவில்லை என்றும், தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன் என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/spreading-fake-news-about-covid-vaccine-case-against-mansoor-alikhan-293435/