எடப்பாடி தொகுதி (முதல்வர் பழனிச்சாமி)
முதல்வரின் சொந்த எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறை அதே தொகுதியில் முதல்வர் வெட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் அவருக்கு சாதகம், பாதகம் என இரண்டும் சம்மாக இருந்தாலும் மக்களின் நிலைபாடே வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 85.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 285205 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் 244125 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதி (மு.க.ஸ்டாலின்)
கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது 3-வதுமறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஸ்டாலிள் களமிறங்கிய இந்த தொகுதியில், மொத்தம் 6.52 சதமவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
சேப்பாக்கம் (உதயநிதி ஸ்டாலின்)
கடந்த தேர்தல்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போது அவரது பேரனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் இந்த தொகுதியில், 58.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
போடி (ஒ.பன்னீர்செல்வம்)
2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தற்போது 3-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நேற்று 73.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கோவில்பட்டி (டிடிவி தினகரன்)
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த முறை கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நேற்று 67.43 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
கோவை தெற்கு (கமல்ஹாசன்)
முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாஜகவின் மகளிர் அணி தலைவி வானதி சீனிவான் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், 60.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருவெற்றியூர் (சீமான்)
முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் நேற்று 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில், 58.40 சதவீத வாக்குகளும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில், 81.90 சதவீதம் வாக்குகளும், நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை தொகுதியில், 66.90 சதவீத வாக்குகளும், எச்.ராஜா போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில், 66.22 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-percentage-of-votes-for-cm-candidate-constituency-289618/