வியாழன், 8 ஏப்ரல், 2021

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 27,743ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டியில் 390 நபர்களுக்கும், கோவையில் 332 நபர்களுக்கும், திருவள்ளூரில் 208 நபர்களுக்கும், திருப்பூரில் 141 நபர்களுக்கும், தஞ்சையில் 108 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 96 நபர்களுக்கும், திண்டுக்களில் 94 நபர்களுக்கும், திருச்சியில் 91 நபர்களுக்கும், சேலத்தில் 90 நபர்களுக்கும், கூடலூரில் 70 நபர்களுக்கும், வேலூரில் 68 நபர்களுக்கும், விழுப்புரத்தில் 52 நபர்களுக்கும், ராணிப்பேட்டையில் 41 நபர்களுக்கும், திருவண்ணாமலையில் 38 நபர்களுக்கும், திருப்பத்தூரில் 25 நபர்களுக்கும் கள்ளக்குறிச்சியில் 24 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே 10க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகிய்ய்ள்ளது.

நேற்று உயிரிழந்த 17 நபர்களில் சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டில் இரண்டு பேரும், கோவை, மதுரை, நாகை, சேலம், தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் திருச்சியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கோவையில் சேர்க்கப்பட்டிருந்த 36 வயது பெண்ணிற்கு இணை நோய் இருந்தது கண்டறியப்பட்டது. ஏப்ரல் 4ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அடுத்த நாள் சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

எத்தனை பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது?

புதன்கிழமை அன்று 65,764 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. 32251 நபர்கள் அதில் 45 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள். 30,113 மூத்த குடிமக்களுக்கு நேற்று தடுப்பூசி வழங்கப்பட்டது. 4114 கட்டங்களில் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளன. 65,764 நபர்களில் 1,603 நபர்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றும் நபர்கள், 1423 நபர்கள் முன்கள பணியாளர்கள், 27,825 நபர்கள் அதில் இணை நோய் உடைய 45 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள். 26136 மூத்த குடிமக்கள் கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை பெற்றனர். 253 சுகாதாரத்துறையினர், 121 முன்கள பணியாளர்கள், 3977 நபர்கள் கோவாக்ஸினை பெற்றனர்.

புதுவையில் நிலைமை என்ன?

புதுவையில் நேற்று புதிதாக 173 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களின் தாக்கத்தால் உயிரிழந்தார். புதுவையில் இதுவரை 687 நபர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். புதுவை (554), காரைக்கால் (77), ஏனாம் (45), மாஹே (11). நேற்று பதிவான புதிய வழக்குகளில் 173-ல் 168 வழக்குகள் புதுவையிலும், 5 காரைக்காலிலும் பதிவானவை. மாஹே மற்றும் ஏனாமில் நேற்று புதிய நோய் தொற்று பதிவாகவில்லை. புதுவையில் 1820 நபர்கள் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1367 நபர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-covid19-vaccination-daily-report-chennais-caseload-crosses-10000-289820/

Related Posts:

  • "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் நாம் தூய்மையாக இருப்பது மட்டும் நமக்குப் போதாது. நமது தூய்மையைக் களங்கப்படுத்துகின்ற வாய்ப்புக்களையும் அதற்குரிய காரண காரியங்களையும் தவிர்க்க வேண்டு… Read More
  • ODM/OEM ODM ODM stands for Original Design Manufacturer and refers to a company that both designs and manufactures products. The products are then dis… Read More
  • சமஉரிமை வழங்கி சமத்துவம் பேணி ‪#‎இஸ்லாம் நிகழ்த்திய அற்புதம்! கடவுளைக் காண(?) கதவை உடைத்த பக்தர்கள்(?) : - சிந்திப்பார்களா? அடைத்துவைத்த அறையிலிருந்து கடவுளை பார்க்க தடைபோட்டதால் கதவை உடைத்துக் கொண்டு… Read More
  • இஸ்லாமிய   பொருளாதார   கொள்கை - 2.5% கண்டிப்பாக இல்லாதவருக்கு தரவேண்டும் - வட்டி கண்டிப்பாக வாங்க  கூடாது வட்டி இல்ல… Read More
  • Feb 14 காமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு...பிப்ரவரி 14 காதலர் தினம் என்ற பெயரில் காமுகர்களின் களியாட்டங்கள் அரங்கேற உள்ளன.இந்த காமுகர்கள் கொண்டாடும் கழ… Read More