திங்கள், 10 அக்டோபர், 2022

சென்னையில் பாதுகாப்புத் துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

 

சென்னையில் நடந்த DEFENCE CIVIL LINE தேர்வில் புளுடூத் வைத்தும்
ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய அரியானாவைச் சேர்ந்த 29 பேர் மீது
காவல்துறை வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை நந்தம்பாக்கம் எம்.எச். சாலையில் Army Public school Chennai
செயல்பட்டு வருகிறது. இங்கு “Defence civilian Recruitment Group ‘C’ Exam”
நேற்று காலை 8 மணி முதல் 5.30 மணி வரை நடந்தது. இந்த தேர்வில் மொத்தம் 1,728
நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் கலந்து கொண்ட
அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமார் 29 நபர்கள் சிறிய அளவிலான ப்ளூடூத் டிவைஸ்
பயன்படுத்தி தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத நபர்
உதவியுடன் வினாக்களை தெரிவித்து விடைகளை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சஞ்சய் என்பவருக்கு பதில் வினோத் சுக்ரா என்பவரை வைத்து தேர்வில் ஆள்
மாறாட்டம் செய்ததையும் தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ராணுவ மருத்துவமனை சுபேதார் ஸ்ரீதர் தலைமையில் 10 ராணுவத்தினர்
நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி செய்து தேர்வு எழுதிய 29 பேர் மீதும்
புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 29 பேர் மீதும்
வழக்குப் பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ்
வழக்குப் பதிவு செய்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தியது.


அதன் பின்னர் குற்றம் செய்தவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய
ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் நந்தபாக்கம் காவல் துறையினர், அனைவரையும் நேற்றிரவு சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இன்று காலை 11 மணியளவில்
காவல் நிலையத்தில் அவரவர் ஆவணங்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த 29 பேரும் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மற்றும் ஹிசார் பகுதியை
சேர்ந்தவர்கள். தேர்வு எழுதுவதற்காக வேண்டி அவர்களது கிராமத்தில் இதுபோன்ற பிரத்யேக சாதனங்கள் கிடைக்குமா என விசாரித்து கிடைக்கபட்ட தகவலின் அடிப்படையில், டில்லியில் உள்ள ஏஜென்டு ஒருவர் மூலம் இந்த வகையான ப்ளூடூத் சாதனங்களை 10,000 முதல் 15,000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.

காதின் உள்ளே வைக்கப்பட்டால் தெரியாத அளவிலான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம், சிறிய ஆண்டெனா கருவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாம்.


உள்ளே இருப்பது போன்றே தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சாதனத்தை
ஆக்டிவேட் செய்வதற்காக சிம் கார்டு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டு
இருப்பதாகவும், அதனை அலைபேசியில் insert செய்தவுடன் அது தேர்வு மையத்திற்கு
வெளியே இருக்கும் அந்த நபருக்கு Connect ஆகுமாம்.

அதன் பின் அந்த நபர், இவர்கள் கேட்கும் கேள்விக்கான பதிலை கூறுவார் என, தேர்வு
எழுதி மாட்டிக்கொண்ட ஒருவர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த நபர்?

தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கான விடை தெரிந்திருக்க கூடும் என்றால்
அவருக்கான சம்பந்தம் என்ன?

இதுவரை எத்தனை பேருக்கு இதுபோன்று மோசடி செயலில் ஈடுபட பணத்தை பெற்றுக்கொண்டு உதவி செய்திருப்பார் என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.

source https://news7tamil.live/sthose-who-impersonated-the-exam-on-behalf-of-the-security-department-in-chennai-were-arrested-and-released-on-bail.html