திங்கள், 10 அக்டோபர், 2022

வெனிசுலாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு

 

10 10 2022

வெனிசுலா நாட்டில் பெய்து கனமழை காரணமாக நிலச்சரிவு சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அங்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு இழப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது.

இந்நிலையில், அரகுவா மத்திய மாகாணத்தில் திடீரென நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் சிக்கி கொண்டனர். அதில், 22 பேர் உயிரிழந்தனர். 50 பேரை காணவில்லை. இதனால் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரகால நிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு முகமைகளை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, மீட்பு மற்றும் நிவாரண பணியில் தேசிய பேராபத்து மேலாண் அமைப்பு மற்றும் காவல் அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

வெனிசுலாவில் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்கும் வகையில் நாட்டில் 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அதிபர் மதுரோ அறிவித்து உள்ளார். மாயமான 50 பேரின் நிலை என்ன மேலும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்து பாதுகாப்பு குழு கண்காணித்து வருகின்றனர்.

 

-இரா.நம்பிராஜன்

source https://news7tamil.live/heavy-rain-in-venezuela-22-people-were-killed-in-the-landslide.html

Related Posts:

  • SIR.... சார்....!!! என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்.. ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...அதன் அர்த்தம் என்ன......??? SLAVE I REMAIN... என… Read More
  • வாட்ஸ் அப் காலிங் வாட்ஸ் அப் காலிங் வசதிக்கு வாங்க! (இந்தியர்களுக்கு) “வாட்ஸ் அப்” தனது அழைப்பு சேவையை ஓராண்டுக்கு இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. … Read More
  • கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்‌கள்.!. கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் … Read More
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி திருச்சி, : டெல்லி மேலாண்மை இயக்குனர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பெங்களூரு தனியார் நிறுவனம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத் தின்படி வேலையி… Read More
  • ஊடகங்களில் இன்றய நிலை.. ************************************* உன்மை ; ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிமின் சைக்கிளில் டியூப் வெடித்தது. செய்தி ; சக்தி வாய்ந்த குண்… Read More