மத்திய கல்வி நிறுவனங்கள், பணித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு இந்த மொழியை திணிப்பதை நாங்கள் ஒருபோரும் ஏற்கமாட்டோம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வி நிறுவனங்களான கேந்திரிய, நவோதயா வித்யாலயாக்கள், ஐ ஐ டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய அரசு பணி நியமனத் தேர்வுகள், ஐ.நா. பயன்பாடு எல்லாவற்றிலும் இனி இந்தி வழிதான் பின்பற்றப்படவுள்ளது.
அலுவல் மொழி சட்டம், பிரிவு 1இன் கீழான மாநிலங்களின் நீதிமன்றங்களில் இந்தி, அலுவல் பயிற்சிகளில், அலுவல் நிகழ்ச்சி நிரல்களில், தூதரகங்களின் தகவல் தொடர்பில் எங்கும் எல்லாம் இந்தி என்ற நிலை வரவுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச் சட்ட குழுவின் 11 வது தொகுப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“வணக்கோம்”, அரைகுறை உச்சரிப்பில் குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப்பாக உள்ளது. மொழி உரிமை, மொழி பன்மைத்துவம் மீதோ கடும் தாக்குதல் நடந்துள்ளது. எட்டாம் அட்டவணையின் கீழ் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் தமிழகம் அனுமதிக்காது.
மத்திய கல்வி நிறுவனங்கள், பணித் தேர்வுகள், ஐ.நா. பயன்பாடு எல்லாவற்றிலும் இனி இந்தி வழி தான். இந்திய மொழிகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அப்பட்டமான தாக்குதலாகும். இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சி இது. இதை நாங்கள் ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/we-will-never-accept-the-attempt-to-make-india-hindi-s-venkatesan.html