செவ்வாய், 8 நவம்பர், 2022

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; மார்ச் 13 முதல் தேர்வுகள் தொடக்கம்

 

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; மார்ச் 13 முதல் தேர்வுகள் தொடக்கம்
தமிழ்நாடு பொதுத் தேர்வு 2023 | 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.

இந்தநிலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023

மார்ச் 13 – மொழிப்பாடம்

மார்ச் 15 – ஆங்கிலம்

மார்ச் 17 – கணினி அறிவியல்

மார்ச் 21 – இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 27 – கணிதம், விலங்கியல், வணிகவியல்

மார்ச் 31 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

ஏப்ரல் 3 – வேதியியல், கணக்கியல், புவியியல்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023

மார்ச் 14 – மொழிப்பாடம்

மார்ச் 16 – ஆங்கிலம்

மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

மார்ச் 28 – வேதியியல், கணக்கியல், புவியியல்

மார்ச் 30 – கணினி அறிவியல்

ஏப்ரல் 5 – கணிதம், விலங்கியல்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023

ஏப்ரல் 6 – மொழிப்பாடம்

ஏப்ரல் 10 – ஆங்கிலம்

ஏப்ரல் 13 – கணிதம்

ஏப்ரல் 15 – அறிவியல்

ஏப்ரல் 20 – சமூக அறிவியல்

source https://tamil.indianexpress.com/education-jobs/minister-anbil-mahesh-release-class-10-11-12-public-exam-schedule-537402/