சனி, 26 நவம்பர், 2022

இந்தியாவை இந்து நாடு என்று ஆளுநர் பேசுவது அரசியலமைப்பிற்கு எதிரானது – கனிமொழி

 25 11 2022

இந்தியாவை இந்து நாடு என்று ஆளுநர் பேசுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கான வேளாண் துறை சார்ந்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பனைப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டதாகவும் வேளாண்மைத் துறைக்கு

என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த அரசு திமுக அரசு என்று தெரிவித்தார்.
மேலும், வேளாண்மைத் துறை தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டி இருப்பதாகவும் அவர்குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியா சனாதனம் இந்து நாடு என்று ஆளுநர் பேசுவது குறித்த கேள்விக்கு இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இந்து நாடாகப் பார்க்கவில்லை. மதச்சார்பற்ற நாடாகத்தான் அரசியல் சட்டம் பார்ப்பதாகக் குறிப்பிட்டவர். யாரும் அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பேசுவது நல்லதல்ல என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

source https://news7tamil.live/governors-talk-of-india-as-a-hindu-country-is-unconstitutional-kanimozhi.html