பி.ரஹ்மான். கோவை
25 12 2022
ஆண்டு தோறும் நவம்பர் 26″ம் தேதி சட்ட நாளாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
“மன்னராட்சியின் மேன்மைகள், ஜனநாயக சிந்தனைகள்” ஆகிய இரு தலைப்புகளின் கீழ் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், இதிகாசம், புராணம் ஆகிய நூல்களில் காணப்படும் சிந்தனைகளை கொண்டு இந்த கருத்தரங்கு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ள திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகள் யுஜிசி யின் இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் கழகம் சார்பில் யு.ஜி.சி”யின் இந்த கருத்தரங்கிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கழக்கத்தின் மாநில துணைசெயலாளர் இராகுலன் தலைமை வகித்த இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யுஜிசி யை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட நாளில் கருத்தரங்கு நடத்த முடிவெடுத்துள்ள யு.ஜி.சி”யை கண்டித்து கோவையில் திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dravida-student-party-protest-against-ugc-seminar-in-coimbatore-548105/