21 11 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று தொடங்கியது. இநிந்லையில் கால்பந்து பார்வையாளருக்கு மதுபானம் வழங்கப்படாது என்று கதார் அரசு தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில் கத்தார் ஒரு இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாடு என்பதால் அங்கு மதுபானத்திற்கு ஏற்கனவே தடை நிலவுகிறது.
இந்நிலையில் நாம் குரானில் மது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொண்டால்தான், ஏன் இங்கே மதுபானம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும். குரானில் குறிப்பிட்டுள்ளது படி மதுபானம் என்பது சாத்தானின் செயலுக்கு துணை போவதாகவும். மதுபானம் கலந்த உணவை சாப்பிடுவது கூட குற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் மதுபானம் வழங்கும் விடுதிகளில் வேலை செய்வது கூட தவிர்க்க பட வேண்டும் என்று குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களிடம் 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் மதுபானம் குடிப்பது ஒரு முறை தவறிய செயல் என்றும் அது வாழ்வின் நீதிக்கு எதிராக உள்ளது என்றும் கருதிகிறார்கள். சிலர் மதுபானம் குடித்தாலும் மதுபானம் தவறு என்றே கருதுகின்றனர்.
இந்நிலையில் சில இஸ்லாமிய நாடுகளில், உதாரணமாக துபாயில், மதுபானம் குடிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் சவுதி அரேபியாவில் இது பெரும் பாவமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுபானத்தை எப்படியாவது நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பல முயற்சிகள் நடத்தப்படுள்ளது. பெப்சி என்ற குளிர்பானம் பெயரில் மதுபானம் கடத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானம் இல்லாததால் மெத்தனால் குடித்து மக்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சவுதியை போல் கத்தாரிலும் மதுபானம் தடை நிலவுகிறது. எங்கள் நாட்டு கலாச்சாரத்திற்கு மக்கள் மதிப்பு வழங்க வேண்டும் என்று கத்தார் தெரிவித்துள்ளது. சில பணக்கரார்கள் புழங்கும் விடுதிகளில் மட்டுமே வையின் மற்றும் ஷாம்பியன் கிடைக்கும் என்று கூறப்படுள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/islams-ban-on-alcohol-and-how-its-applied-545101/