வெள்ளி, 18 நவம்பர், 2022

மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் சேர்ப்பது அவசியம் – மின்சார வாரியம் அறிவிப்பு

 

ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொண்டவர்களுக்கான இலவச மற்றும் மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார முறைகேட்டைத் தடுப்பதற்கு மின் நுகர்வோர் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் நுகர்வோர் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் லிங்க் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் மோசடிகளைத் தவிர்க்க மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் சேர்க்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 100 யுனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யுனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யுனிட் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர் என அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தொற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாதவர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை என்றும் மின்சார வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 11 2022



source https://tamil.indianexpress.com/tamilnadu/tneb-announced-aadhaar-number-must-add-with-eb-number-543450/

Related Posts: