புதன், 23 நவம்பர், 2022

Whatsapp New Update: இனி எல்லாம் இங்கே.. வாட்ஸ்அப்பில் ஷாப்பிங், பிசினஸ் செய்யலாம்.. எப்படி தெரியுமா?


Whatsapp New Update: இனி எல்லாம் இங்கே.. வாட்ஸ்அப்பில் ஷாப்பிங், பிசினஸ் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

WhatsApp New Feature: Users Can Search for Businesses | மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலக முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் ஏராளனமான பயனர்களை கொண்டுள்ளது. தகவல்களை எளிதாக மற்றவர்களுக்கு பகிர முடிவதால் இது இளைஞர்கள் முதல் பெரியவர்களை அனைவரையும் ஈர்த்துள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது வியாபாரிகளை கவரும் வகையில் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘வாட்ஸ்அப் பிசினஸ் சர்ச்’ (WhatsApp Business Search) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


பயனர்கள் வியாபாரிகளைத் தேடவும், அவர்களைத் தொடர்பு கொள்ளவும், விற்பனை செய்ய, வாங்க அனுமதிக்கிறது. முற்றிலும் வணிக பயன்பாட்டிற்கான அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட நாடுகளில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசில், இங்கிலாந்து, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

எப்போதும் போல் வாட்ஸ்அப் பக்கம் சென்று அங்கு ‘பிசினஸ் சர்ச்’ என்ற அம்சம் அப்டேட் செய்யப்பட்டிருக்கும். அங்கு உங்களுக்கு தேவையான கடைகள், பிராண்ட் பெயர்கள் குறிப்பிட்ட தேடி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

புதிய P2M அல்லது Pay to Merchant அம்சமானது, வியாபாரியிடம் நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கிறது. இது தற்போது பிரேசிலில் மட்டும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் உடன் சேர்த்து மெட்டா 3 வணிக பயன்பாட்டு தளங்களை கொண்டுள்ளது. ஏற்கனவே மெட்டாவிற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 2020-ம் ஆண்டு வணிக பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இது செயல்பாட்டில் உள்ளது.

‘புதிய ஃபைண்ட் எ பிசினஸ்’ அம்சத்தில் பயனர்கள் வசதிக்கு ஏற்ப category பட்டியலிடப்பட்டிருக்கும் shopping, food & drink, finance & banking என வரிசைபடுத்தப்பட்டிருக்கும்.

இந்த புதிய அம்சம் உள்ளூர் வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், இந்த அம்சம் தனியுரிமையில் பாதிப்பு ஏற்படுத்தாது. தனியுரிமை பாதுகாப்பு உறுதியளிக்கப்படும் என்று கூறினார்

இந்தியாவில் இதன் பயன்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/technology/whatsapp-will-soon-let-you-search-for-businesses-right-from-the-app-itself-545910/