வியாழன், 17 நவம்பர், 2022

ஆளுனர்களுக்கு எதிரான யுத்தம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் உடன் கைகோர்த்த தி.மு.க

 ஆளுனர்களுக்கு எதிரான யுத்தம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் உடன் கைகோர்த்த தி.மு.க

ஆளுநர்களுக்கு எதிரான யுத்தத்தில், கேரளாவில் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தி.மு.க கை கோர்த்துள்ளது. இந்த போராட்டத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவா பங்கேற்றது கவனத்தைப் பெற்றுள்ளது.

கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கும் மோதல் நிலவி வருகிறது. அதே போல, தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.


ஆளுநர்களுக்கு எதிரான யுத்தத்தில், கேரளாவில் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தி.மு.க கை கோர்த்துள்ளது. இந்த போராட்டத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவா பங்கேற்றது கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பல தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இந்து மதம், சனாதனம், பட்டியல் இனத்தவர் உள்ளிட்ட விஷயங்களில் ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருவதாக ஆளும் தி.மு.க விமர்சனம் செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதே போல, கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிறது.

பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த ஆளுநர்களுக்கு எதிரான யுத்தத்தில், கேரளாவில் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தி.மு.க கை கோர்த்துள்ளது. இந்த போராட்டத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவா பங்கேற்றது கவனத்தைப் பெற்றுள்ளது.

கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கானை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஆளும் இடது முன்னணி கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பங்கேற்று முழக்கமிட்டார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணி சார்பில் அம்மாநில ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கூறினார்.

மத்திய அரசு ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் கூட்டாட்சி முறையை நீக்குகிறது என்று திருச்சி சிவா கூறினார். மேலும், கேரளாவில் ஆரிப் முகமது கான் மற்றும் தமிழ்நாட்டில் ஆர்.என். ரவி மக்கள் விருப்பத்துக்கு எதிராக இருக்கிறார்கள். கேரளாவைப் போலவே, தமிழக ஆளுநரும் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார் என்று திருச்சி சிவா கூறினார். மேலும், கேரள ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்ததாக திருச்சி சிவா கூறினார்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டு ஆளுநர்களுக்கு எதிரான யுத்தத்தில், திருவணந்தபுரத்தில் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தி.மு.க கை கோர்த்துள்ளது. இந்த போராட்டத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவா பங்கேற்றது கவனத்தைப் பெற்றுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-and-cpm-joints-in-protest-against-governors-tiruchi-siva-participate-542878/