வியாழன், 17 நவம்பர், 2022

ஆதார் போதும்.. ஆன்லைனில் பான் கார்டு.. விண்ணப்பிப்பது எப்படி?

 ஆதார் போதும்.. ஆன்லைனில் பான் கார்டு.. விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உடனடி பான் கார்டு விண்ணப்பம்

இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு இல்லாமல் எந்த ஒரு நிதி பணியும் நடக்காது என்ற நிலை நிலவுகிறது.
இந்தப் பான் கார்டு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்று ஒரு முக்கிய ஆவணமாக திகழ்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், பான் கார்டு இல்லாதது ஒருவரை சிரமத்திற்கு ஆளாக்கலாம். இந்த நிலையில், பான் கார்டு பெறுவதும் மிகவும் எளிதாகிவிட்டது.
அந்த வகையில் பான் கார்டு எளிதில் ஆன்லைனில் பெறுவது எப்பாடி என்று பார்ப்போம்.

முதலில் பான் கார்டை பெற, PAN கார்டு NSDL (https://tin.tin.nsdl.com/pan/index.html) அல்லது UTITSL (https://www.pan.utiitsl.com/PAN/) என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.
இதில் ஜிஎஸ்டி நீங்கலாக ரூ.93 கட்டணமாக பெறப்படும். நீங்கள் இந்தக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.

தொடர்ந்து அந்தப் பக்கத்தில் உங்களது பெயர், முகவரி உள்ளிட்ட முழுமையான தகவல்களை சரியான முறையில் பதிவிட வேண்டும்.
தொடர்ந்து, இத்துடன், சில முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். இல்லையெனில், NSDL அல்லது UTITSL அலுவலகத்திற்கு சென்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் தகவல்களை முழுமையான பதிவு செய்து Save செய்து, ஒப்புகை சீட்டு ஒன்று கிடைக்கும். அதன் பிறகு, 14 நாட்களுக்குள் நீங்கள் குறிப்பிட்ட முகவரியில் உங்களுக்கு பான் கார்டு தபால் மூலம் கிடைக்கும்.
இதேபோல், உங்கள் பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதை ஆன்லைனிலும் எளிதாக திருத்திக் கொள்ளலாம்.


source https://tamil.indianexpress.com/business/instant-pan-card-application-using-aadhaar-card-542631/