செவ்வாய், 22 நவம்பர், 2022

. அரசியல் சாசனம் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுநர்களாக இல்லை, – சு.வெங்கடேசன் எம்.பி

 21 11 2022


ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்ட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியுள்ளார்.

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் விளையாட்டில் இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தற்போது அர்ஜூனா விருதுக்கும் தேர்வாகியுள்ள கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவையும், டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கால் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேலூர் வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வர்ஷினியையும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “இறகுப்பந்து மற்றும் குத்துச்சண்டையில் 2 மாணவிகள் மதுரைக்குப் பெருமை சேர்ந்து உள்ளனர். இரு மாணவிகளும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். சாதிக்க முடியும் என்கிற நோக்கில் இரு மாணவிகளும் செயல்பட்டதால் சாதிக்க முடிந்தது என கூறினார்.

மேலும், விளையாட்டு வீராங்கனை மாணவிகளுக்குக் காலை, மாலை உணவு வழங்க வேண்டும். அந்த வகையில் மதுரை மீனாட்சிக் கல்லூரியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் 100 விளையாட்டு வீரர்களுக்குக் காலை மதிய உணவு வழங்குவேன்.

விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும். 130 கோடி இந்தியர்கள் தமிழை காப்பாற்றுவார்கள் வேண்டும் என பிரதமர் மோடி பேசி உள்ளார். ஆனால் மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தியில் தேர்வு எழுதி படிக்க முடியும் எனும் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர் என பேசினார்.

மேலும், ஒரு புறம் தமிழைக் காத்து வருகிறோம் என சொல்லும் மோடி அரசு மற்றொரு புறம் இந்தியைத் திணித்து வருகிறது. மாநில வாக்கு வங்கியைப் பெறுவதற்கு மொழி கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிக தொன்மையான மொழியாக உள்ள தமிழை அரசியலுக்கு மோடி பயன்படுத்தி வருகின்றனர். கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆளுநர்கள் பாஜகவின் பிரதிநிதிகளாக உள்ளனர். அரசியல் சாசனம் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுநர்களாக இல்லை, இந்தியாவின் மாண்பை ஆளுநர்கள் சிதைத்து வருகிறார்கள். ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்ட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

ஜல்லிக்கட்டு வழக்கு தமிழ் பண்பாடு, மரபுக்கு எதிராக பெரும் சதி பின்னப்பட்டு வருகிறது, ஜல்லிக்கட்டு வழக்கு சட்டப் போராட்டம். ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு வெற்றி பெறும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒவ்வொரு தமிழனும் ஈடுபடுவான். ஜல்லிக்கட்டைக் காக்கின்ற பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு எனக் கூறினார்

source https://news7tamil.live/governors-are-agents-of-bjp-s-venkatesan-mp.html