சனி, 19 நவம்பர், 2022

ஒற்றுமை நடைபயணம்; ராகுலுடன் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்

 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் இணைந்தார். 

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். 3 நாட்கள் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் தனது நடைபணத்தை மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி தற்போது மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தில் ராகுலுடன், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துஷார் காந்தி கலந்து கொண்டார்.

இதுகுறித்து துஷார் காந்தி தனது ட்விட்டர் பதிவில், நான் பிறந்த ஊரில் இருந்து ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டது வரலாற்று நிகழ்வு என காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.



source https://news7tamil.live/unity-walk-gandhis-great-grandson-who-was-associated-with-rahul.html