காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு திமுக அரசு போட்டிப் போட்டு ஆட்களை அனுப்பவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், வடபழனி கோவில் பக்தர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மகிழ்ச்சி அளிப்பதாகும் அமைச்சர் தெரிவித்தார்.
திமுக அரசு அனைத்து சமுதாயத்திற்கும் சமமான அரசு. ஏனென்றால் அனைத்து மக்களும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நாங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு காசிக்குப் பக்தர்களை அனுப்பவில்லை எனவும் கூறினார்.
கோசாலையை தற்போது நாங்கள் பசு பராமரிப்பு என்றும் அழைத்து வருகிறோம். திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோசாலை அமைந்துள்ளதால் அதை வெளியில் அமைக்க உத்தரவிட்டு உள்ளோம். ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்ல அவர்களுக்குத் தேவையான அனைத்து சந்தேகங்களும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
source https://news7tamil.live/dmk-government-did-not-send-people-to-kashi-tamil-sangam-minister-shekharbabu.html