ஞாயிறு, 6 நவம்பர், 2022

2017 சட்டப்பேரவை தேர்தல்.. குஜராத், ஹிமாச்சலில் 3ஆம் இடம்பிடித்த நோட்டா

 2017 சட்டப்பேரவை தேர்தலில் குஜராத்தில் உள்ள 182 இடங்களில் 115 இடங்களிலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 இடங்களில் 12 இடங்களிலும் நோட்டா மூன்றாம் இடம் பிடித்தது.

அந்த வகையில், குஜராத்தில் உள்ள 3 கோடி வாக்காளர்களில் 5.51 லட்சம் வாக்காளர்கள், அதாவது 1.84% பேர் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தை பொறுத்தவரை 37.84 லட்சம் வாக்காளர்களில் 34,232 வாக்காளர்கள், அதாவது 0.90% வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.

இதனால் குஜராத்தில் பாஜக (49.05%) மற்றும் காங்கிரஸுக்கு (41.44%) அடுத்து, NOTAவின் ஒட்டுமொத்த வாக்குப் பங்கு மூன்றாவது இடத்தில் 1.84% ஆக இருந்தது. மேலும், போட்டியிட்ட 794 பேரில் சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர்.
அதேபோல், ஹிமாச்சல் தேர்தல்களில், பாஜக (48.79%), காங்கிரஸ் (41.68%) மற்றும் சிபிஐ(எம்) (1.47%) ஆகியவற்றுக்குப் பிறகு நோட்டாவின் வாக்குகள் நான்காவது அதிகபட்சமாக (0.90%) இருந்தது.



source https://tamil.indianexpress.com/india/aap-in-fray-a-2017-detail-nota-3rd-in-115-seats-in-gujarat-12-in-himachal-536122/