31 10 2022
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கா கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நிறைவடைந்துள்ள 3 சுற்று கலந்தாய்வில், 3 கல்லூரிகளில் மட்டுமே 100% நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பொறியில் படிப்புக்கான விருப்பம் அதிகரித்துள்ள நிலையில் நடப்பு ஆண்டுக்கான பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதில் ஆகஸ்ட் 18 முதல் 22 வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 10 முதல் 15 வரை பொது பிரிவினர், தொழில் பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. 2 சுற்றுகள் முடிவில் தமிழகத்தில் 446 பொறியியல் கல்லூரிகளில், 323 கல்லூரிகளில் 10% அட்மிஷன் கூட நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் 12 கல்லூரிகளில் மட்டும் 90% அட்மிஷன் நடைபெற்றுள்ளதாகவும், 48 கல்லூரிகளில் 50% அட்மிஷன் நிரம்பியுள்ளதாகவும், 80 கல்லூரிகளில் ஒரு அட்மிஷன் கூட நடைபெற வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
2-ம் கட்ட கலந்தாய்வு முடிவில், குரோம்பேட்டி, எம்ஐடி கிண்டி பொறியியல் கல்லூரி, எஸ்எஸ்என் ஆகிய 3 கல்லுரிகளில் அதிக அட்மிஷன் நடைபெற்று முதல் 3 இடத்தை பிடித்துள்ளது. 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவில் 27740 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே பொறியில் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 49043 மாணவர்கள் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்த 2 சுற்றுகளில் காலியாக உள்ள 1,11,511 இடங்களுக்கு 1,10,701,மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 3-ம் கட்ட கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் 25 கல்லூரிகளில் ஒரு அட்மிஷன் கூட நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே 90% அட்மிஷன் நடைபெற்றுள்ள 33 கல்லூரிகளில் 17 தனியார் கல்லூரிகள் என்றும், 173 கல்லூரிகளில் 10% மட்டுமே அட்மிஷன் நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், 3-ம் கட்ட கலந்தாய்வு முடிவில் 25 கல்லூரிகளில் ஒரு அட்மிஷன் கூட பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், கம்யூட்டர் சையின்ஸ், தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகளில் அதிக அட்மிஷன் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில் ஆலோசகர் ஜெய்பிரகாஷ் காந்தி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அரசு பொறியியல் கல்லூரிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், அண்ணா பல்கலைகழகத்தின் 6 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கல்லூரிகளில் 50% சதவீத அட்மிஷன் கூட நடைபெறவில்லை.
அண்ணா பல்கலைகழக கல்லூரிகள் புகழ்பெற்றது என்றாலும் கூட உட்கட்டமைப்பு பிரச்சினைகள் இருப்பதால் மாணவர்களை கவரவில்லை. அரசும் பல்கலைகழகமும் இணைந்து இந்த பிரச்சினையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-engineering-counselling-no-admission-on-25-colleges-all-over-tamilnadu-534119/